உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க.,நிர்வாகி நீக்கம்

அ.தி.மு.க.,நிர்வாகி நீக்கம்

கோபிசெட்டிபாளையம்: வெள்ளாங்கோவிலில் அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் எதிரொலியாக, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் அணி செயலாளர் சுந்தர்ராஜன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வினரிடையே கடும் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயல்பட்ட மாவட்ட கவுன்சிலர் மதிவாணன், பஞ்சாயத்து தலைவர் தன்னாசி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் தன்னாசியை எதிர்த்து, சுயேட்சையாக மதிவாணனும் களத்தில் இறங்கி உள்ளார். மதிவாணனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் அணி செயலாளர் சுந்தர்ராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அளுக்குளி பஞ்சாயத்து முதல் வார்டை சேர்ந்த லட்சுமியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்