உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழை மரம் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை -

வாழை மரம் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை -

வாழை மரம் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனைஈரோடு, நவ. 7-ஈரோடு அருகே, தொடர் மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அடுத்த சமயசங்கிலி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட காலிங்கராயன் வாய்க்கால் கரையோரப் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், சமயசங்கலி பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்து காணப்படுகிறது. இதில், வாழை பூ, காய்களுடன் கூடிய 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது. இது விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,'ஒரு ஏக்கருக்கு, ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ளோம். பெரும்பாலான மரங்கள் சாய்ந்து கிடப்பதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தோட்டங்களில் ஆய்வு செய்து, சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை