உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல விளையாட்டில் ஈரோடு அணி சாம்பியன்

மண்டல விளையாட்டில் ஈரோடு அணி சாம்பியன்

ஈரோடு: தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடந்தது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட அணிகளை சேர்ந்த, 150 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். நீச்சல், வாலிபால், கூடைப்0பந்து, நீளம் தாண்டுதல், 400 மீ, 800 மீட்டர் ஓட்ட போட்டிகளில் ஈரோடு அணி முதலிடம் பிடித்-தது. உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 1,500 மீட்டர் ஓட்டத்தில் கோவை அணியும், 100, 200 மீட்டர் ஓட்டத்தில் திண்டுக்கல் அணி முதலிடம் பிடித்தது. ஈரோடு மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று, மாநில போட்-டிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை