உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 6,7ம் வகுப்புக்கு தேர்வு நிறைவு; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

6,7ம் வகுப்புக்கு தேர்வு நிறைவு; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நேற்றுடன் தேர்வுகள் நிறைவு பெற்றது.ஈரோடு மாவட்ட அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நேற்றுடன் முழு ஆண்டு தேர்வு நிறைவு பெற்றது. தேர்வு முடிந்ததால் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இன்று, எட்டாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நிறைவு பெறுகிறது. துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வரும், 30 வரை பள்ளிக்கு வர பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டு விட்டன. இவை அந்தந்த பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்கு பின், பள்ளி திறந்த முதல் நாளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை