துாய்மை பணியாளர்களுக்கு அந்தியூரில் பிரிவுபசார விழா
அந்தியூர், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், 43 ஆண்டாக துாய்மை பணியாளராக பணியாற்றிய வெள்ளையன், 12 ஆண்டுகளாக பணியாற்றிய சிவபெருமாள், நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பேரூராட்சி சார்பில், அலுவலக வளாகத்தில் பிரிவுபசார விழா நடந்தது. செயல் அலுவலர் சதாசிவம் வரவேற்றார். துணைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். தலைவர் பாண்டியம்மாள் இருவருக்கும், தலா ஒரு குளிர்சாதன பெட்டி நினைவுப்பரிசாக வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.