போக்சோவில் விவசாயி கைது
ஈரோடு,:பவானி, சன்னியாசிபட்டியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 45; பிளஸ் 1 பயிலும், 16 வயது சிறுவனை, பாலியல் ரீதியாக துன்-புறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகா-ரின்படி பவானி போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.