பாம்பு கடித்து விவசாயி பலி
கோபி, :கோபி அருகே பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்பண்ணசாமி, 71; கடந்த, 22ம் தேதி மாலை கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. கோபியில் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கருப்பண்ணசாமி இறந்தார். இதுகுறித்து அவரின் மகன் மோகன்குமார் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.