உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உப்பாறு பாசனத்துக்கு நீர் கேட்டு விவசாயிகள் ஆர்.டி.ஓ.,விடம் மனு

உப்பாறு பாசனத்துக்கு நீர் கேட்டு விவசாயிகள் ஆர்.டி.ஓ.,விடம் மனு

தாராபுரம்:உப்பாறு பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு, ஆர்.டி.ஓ.விடம், விவசாயிகள் மனு அளித்தனர். தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பெலிக்ஸ்ராஜாவிடம், தாராபுரம் தாலுகா உப்பாறு பாசன விவசாயிகள், நேற்று மனு அளித்தனர். மனு விபரம்:உப்பாறு அணை, பி.ஏ.பி. திட்டத்தின் உப திட்டமாக 1960ல், 6,000 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கட்டப்பட்டது. அணை கட்டப்பட்ட பின், மழைநீர் மற்றும் திருமூர்த்தி அணை நீரால், விவசாயம் நடந்தது. உப்பாறு அணையில், 300 மீட்டர் கன அடி நீர் இருக்குமாறும், நீர் விடவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த அடிப்படையில் அணைக்குள் நீர் இருக்கும் என கருதி, விவசாயிகள் சோளம், பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்பொழுது மழை பெய்யாவிட்டால் பயிர்கள் கருகிவிடும்.அதேநேரம் பி.ஏ.பி. பாசனத்துக்கு ஜூலை, 27ல் திறக்கப்பட்ட தண்ணீர், இடைவெளியின்றி இன்னும் செல்கிறது. உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான், இப்படி செய்கின்றனர். எனவே கலெக்டரை சந்தித்து, உப்பாறு பாசன பகுதிகளை பார்வையிட்டு தண்ணீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை