உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயியிடம் ரகளை வாலிபர்களுக்கு காப்பு

விவசாயியிடம் ரகளை வாலிபர்களுக்கு காப்பு

டி.என்.பாளையம், டி.என்.பாளையம், சின்ன வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 57; அதே பகுதியில் உள்ள சிவசக்தி நகர், கருப்பராயன் கோவில் அருகில், மது போதையில் ரகளை செய்த, சிலரை கண்டித்துள்ளார்.இதனால் ரகளையில் ஈடுபட்ட கார்த்தி, பங்களாப்புதுார் சசிக்குமார், 31; டி.என்.பாளையம், காட்டூர்வீதி தமிழ்செல்வன், 24, ஆகியோரை வரவழைத்துள்ளார். இருவரும் ராஜேந்திரனை தகாத வார்த்தை பேசி தாக்கி மிரட்டியுள்ளனர். இதை கேள்விப்பட்டு வந்த ராஜேந்திரனின் சகோதரர் வேலுமணி தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ராஜேந்திரன் புகாரின்படி வழக்குப்பதிந்த பங்களாப்புதுார் போலீசார், சசிக்குமார் மற்றும் தமிழ்செல்லவனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை