மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
24-May-2025
டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையை துார்வார, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குண்டேரிப்பள்ளம் அணை குன்றி மலையடிவாரத்தில், 1980ல் கட்டப்பட்டது. 42 அடி உயர அணை மூலமாக, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,500 ஏக்கர் விளை நிலம் இரண்டு போக பாசன வசதி பெறுகிறது. அணை கட்டி, 45 ஆண்டுகளானன நிலையில் இதுவரை ஒரு முறை கூட துார் வாரப்படவில்லை. மலைப்பகுதி வண்டல் மண், சேறு அணையில் தேங்கியுள்ளது. தற்போது அணையில், 22 அடி உயரத்துக்கு வண்டல் மற்றும் சேறு படிந்துள்ளது. இதனால் ஒரு நாள் மழைக்கே அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வீணாகிறது. இதனால் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அணையை துார் வார, 20 ஆண்டுகளாக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த அணையின் ஒரு பகுதி பொதுப்பணித்துறை நிலத்திலும், மற்றொரு பகுதி புலிகள் காப்பக வனப்பகுதியிலும் அமைந்துள்ளது. இதனால் துார் வாருவதில் சிக்கல் நிலவுகிறது.அதாவது பொதுப்பணி, வருவாய் மற்றும் வனத்துறையினர் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, துார் வார முடியும் நிலையில், மூன்று துறைகளையும் ஒருங்கிணைக்க முடியாமல் அல்லது ஒன்று சேராமல், காலம் கடத்தி வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன், அணையை நேற்று பார்வையிட்டார். அணையை துார்வார விவசாயிகள், அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.வனப்பகுதியில் தண்ணீர் தேங்கும் பகுதி மட்டிலுமாவது துார் வாரவேண்டும். இதை செய்தால் கூட, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.உள்ளூர் வர்த்தக செய்திகள்* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 15,202 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 55.19 முதல், 72.10 ரூபாய் வரை, 5,891 கிலோ தேங்காய், 3.௫௨ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த எள் ஏலத்துக்கு, 1,121 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 107.99 முதல், 167.09 ரூபாய்; சிவப்பு ரகம், 93.72 முதல், 142.09 ரூபாய்; வெள்ளை ரகம், 117.74 முதல், 125.29 ரூபாய் வரை, 83,811 கிலோ எள், 1.௯௫ கோடி ரூபாய்க்கு விற்றது.* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), குண்டு உளுந்து, பச்சை பயிர், பாசிப்பருப்பு, தட்டை பயிர், தலா 120 ரூபாய்க்கு விற்றது. கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், தலா 100 ரூபாய்க்கு விற்றது. சீரகம், 360, மிளகு, 800, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 100, வரமிளகாய், 160, பூண்டு, 100 ரூபாய் முதல், 180 ரூபாய், கொள்ளு, 70, புளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது. * பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 785 கிலோ பாக்கு காய்கள் வரத்தானது. ஒரு கிலோ, 160 - 173 ரூபாய்; பாக்கு பழம், கிலோ, 61 - 63 ரூபாய்; பச்சை காய் கிலோ, 50 ரூபாய்க்கும், சாலி பாக்கு, 350 ரூபாய்க்கும் ஏலம் போனது. கொப்பரைகிலோ ரூ.2௦௦திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 772 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 200.20 ரூபாய்க்கு விற்றது. கொப்பரை தேங்காய் முதல் முறையாக கிலோ, ௨௦௦ ரூபாயை கடந்தது இதுவே முதல்முறையாகும்.
24-May-2025