உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காப்பர் ஒயர் திருடும் கும்பல் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

காப்பர் ஒயர் திருடும் கும்பல் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புங்கம்பள்ளியை சேர்ந்த விவசாயிகள் மூர்த்தி, பழனிசாமி, சண்முகம், சுரேஷ். இவர்களின் விவசாய தோட்ட கிணற்று மோட்டார்களில் இருந்த ஒயர்களை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பியூஸ் கேரியர்களையும் எடுத்து சென்று விட்டனர். இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டுகின்றனர். வெட்டி எடுத்த ஒயர்களை, விவசாய நிலங்களிலேயே தீயிட்டு கருக்கி, காப்பர் கம்பிகளை மட்டும் எடுத்து செல்கின்றனர். போலீசார் விசாரணை நடத்தி, திருட்டு கும்பலை பிடிக்க வேண்டும் என்று, புன்செய்புளியம்பட்டி போலீசில் புகாரளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ