உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்

ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்

ஆடுகளின் உடல்களுடன் விவசாயிகள் போராட்டம்காங்கேயம், செப். 27-காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் வீரணம்பாளையம் ஊராட்சி தெற்கு தோட்டத்தை சேர்ந்த விவசாயி செந்தில், 40; பட்டி அமைத்து ஆடு வளர்ப்பு வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றார். அப்போது ஏழு ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. காங்கேயம் பகுதியில் சமீபமாக, தெருநாய்களால் ஆடுகள் பலியாவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் மற்றும் அப்பகுதி விவசாயிகள், இறந்த ஆடுகளை நேற்று எடுத்துக்கொண்டு, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றனர். அங்கு அலுவலக வாசலில் அவற்றை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கேயம் போலீசார், ஊராட்சி தலைவர் உமாநாயகி, யூனியன் சேர்மேன் மகேஷ்குமார், பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாதததால், போராட்டத்தை வலுப்படுத்தினர். காத்திருப்பு போராட்டமாக அறிவித்து, வெறிநாய்கள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த வேண்டும், நாய்களால் பலியாகும் ஆடுகளுக்கு நிவாரணம் வேண்டும் என்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை