உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 13 லட்சம் வேட்டி கொள்முதல் செய்யக்கோரி உண்ணாவிரதம்

13 லட்சம் வேட்டி கொள்முதல் செய்யக்கோரி உண்ணாவிரதம்

ஈரோடு: தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில் நேற்று உண்ணாவிரத போராட்டம் துவங்கினர். கூட்டமைப்பின் தலைவர் தங்கவேல் அளித்த பேட்டி: விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு அரசு நுாற்பாலைகளில் இருந்து வழங்கிய நுால்கள் மூலமே, இலவச வேட்டிகளை உற்பத்தி செய்து, கடந்தாண்டு அரசுக்கு வழங்கப்பட்டது. அதில், 13 லட்சம் வேட்டிகள், தர பரிசோதனையில் வித்தியாசம் உள்ளதாக கொள்முதல் செய்யாமல் இருப்பில் உள்ளது. தர பரிசோதனை என்பது, 25,000 வேட்டிக்கு ஒரு வேட்டி மட்டும் தர ஆய்வுக்கு அனுப்புகின்றனர். கடந்த ஜன., 3ல் கைத்தறி துறை இயக்குநருக்கு கடிதம் எழுதி, 5,000 வேட்டிக்கு, ஒரு வேட்டி பரிசோதிக்க கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று, பிப்., 6ல் மீண்டும் தர பரிசோதனை செய்ய இயக்குநர் உத்தரவிட்டும், அதிகாரிகள் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. உற்பத்தி செய்யப்பட்ட வேட்டிகளுக்கான நெசவு கூலி உட்பட, 20 கோடி ரூபாய் வரை சங்கங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர்களுக்கு நெசவுக்கூலி வழங்க முடியவில்லை. எனவே, 13 லட்சம் வேட்டிகளையும் அரசு கொள்முதல் செய்து, நிதியை விடுவிக்க வேண்டும். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ