உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் தந்தை, -மகனுக்கு கத்திக்குத்து: நான்கு பேர் கைது

காங்கேயத்தில் தந்தை, -மகனுக்கு கத்திக்குத்து: நான்கு பேர் கைது

காங்கேயம், காங்கேயத்தில் தந்தை,- மகனை கத்தியால் குத்தியது தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ராஜிவ் நகரை சேர்ந்தவர் செந்தில், 47, இவரது மனைவி மணி, 41. இவர்களது மகன் கோகுல், 23. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகே, தேனியை சேர்ந்த சரவணகுமார், அவரது நண்பர்கள் குடிபோதையில் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அப்போது செந்தில் வளர்த்து வந்த நாய் மிரண்டு ஓட, இது குறித்து செந்தில் மனைவி மணி வாலிபர்களிடம் கேட்டுள்ளார். இதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.போலீசார் சமாதானம் செய்து வைத்த நிலையில், சரவணன் காங்கேயத்தில் உள்ள சிலரை அழைத்து வந்து, செந்தில், அவரது மகன் கோகுல் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். இருவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட, திருப்பூர் மாவட்ட பார்வார்டு பிளாக் கட்சி ஐடி விங் மாவட்ட நிர்வாகி கோகுல், 20 மற்றும் சரவணகுமார், 39, மதன்குமார், 30, கார்த்தி, 35, ஆகிய நான்கு பேரை காங்கேயம் போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ