மகன் மாயம் தந்தை புகார்
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரம் தங்கமணி வீதியை சேர்ந்தவர் சுரேஷ். கட்டட தொழிலாளி. இவர் மகன் வினோத், 16; கடந்த, 18ம் தேதி மகன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கண்டுபிடித்து தரக் கோரி சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், சுரேஷ் புகார் செய்தார்.