உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் விபரீத முடிவு தந்தை போலீசில் புகார்

மகன் விபரீத முடிவு தந்தை போலீசில் புகார்

மகன் விபரீத முடிவுதந்தை போலீசில் புகார்ஈரோடு, அக். 16-ஈரோடு, கோட்டை, கண்ணகி வீதியை சேர்ந்தவர் தியாகராஜன், 52; இவரின் மகன் ஹரீஷ், 24; மகள் சுவிதா. பெங்களூரில் சுவிதா, எம்.பி.ஏ., படித்து வருகிறார். ஹரீஷ் இரு மாதமாக சென்னையில் தனியார் இன்போடெக் நிறுவன ஐ.டி., பிரிவில் வேலை செய்து வந்தார். வியாபாரத்துக்கு வாங்கிய கடனை அடைக்க, தந்தை தியாகராஜன் வீட்டை விற்றுள்ளார். அதன் பிறகும் கடனை முழுமையாக செலுத்தவில்லை. ஆயுதபூஜை விடுமுறைக்காக வீட்டுக்கு ஹரீஷ் வந்தார். கடந்த, 13ம் தேதி இரவு வீட்டில் அனைவரும் துாங்கிய பின், பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார். மறுநாள் காலை தியாகராஜன் அறைக்கு சென்று பார்த்தபோது, வாயில் நுரையுடன் ஹரீஷ் கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை