சிறுத்தை வேட்டையால் ஓயாத அச்சம்
சத்தியமங்கலம்:தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனுார், பீம்ராஜ் நகர், ஒசூர் பகுதியில், மூன்றாண்டுகளாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் செயல்படாத கல் குவாரியில் பதுங்கியுள்ள சிறுத்தை அவ்வப்போது ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருவது தொடர்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க முடியாமல் அச்சத்தில் உள்ளனர். தொட்டகாஜனுார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரரு புகுந்த சிறுத்தை, சுலோச்சனாவுக்கு சொந்தமான நாயை கொன்று துாக்கி சென்றுள்ளது. சிறுத்தையின் வேட்டை ஓயாத நிலையில், இப்பகுதி மக்களின் பீதியும் ஓயவில்லை. வனத்துறையினரின் மெத்தனமா அல்லது சிறுத்தையின் சாதுர்யமா அல்லது தங்களின் போதாத காலமா என எதுவும் தெரியாமல், மலை கிராம மக்கள் தினமும் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.