கால பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டணம்
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இந்த பூஜைகளில் ஒரு கால பூஜையில் பக்தர்கள் பங்கேற்க, 1,200 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். வரும் ஜூலை முதல் அமலுக்கு வருகிறது. கால பூஜைக்கு பணம் கட்டிய நபர்கள் இருவர் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். ஒரு கால பூஜைக்கு அதிகபட்சம் ஐந்து உபயதாரர்கள் மட்டும் அனுமதி. கலந்து கொள்ள விரும்புவோர், ஏழு நாட்களுக்கு முன் கோவில் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.