உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரி நீரேற்று நிலையம் அருகில் பெண் சடலம்

காவிரி நீரேற்று நிலையம் அருகில் பெண் சடலம்

பவானி, சித்தோடு அருகே காவிரியாற்றில் நீரேற்று நிலையம் அருகில், பெண் சடலம் மிதப்பதாக, சித்தோடு போலீசாருக்கு நேற்று மாலை தகவல் போனது. போலீசார் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். நீரேற்று நிலையம் அருகில் ஆற்றில், ஆகாயத்தாமரை செடிகளிடையே பெண் சடலம் மிதப்பது தெரிந்தது. சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணுக்கு, 30 வயது இருக்கும். தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்று, சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை