உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓவர் சவுண்ட் பைக்குக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி

ஓவர் சவுண்ட் பைக்குக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி

சென்னிமலை, அக். 20--பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார், சென்னிமலை நகர பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் உரிய ஆவணங்களின்றி சென்ற, 30க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். சென்னிமலை தெற்கு ராஜவீதி வழியாக, புல்லட் பைக்கில் சைலன்சர் (புகை போக்கி) மூலம் வெடி சத்தத்தை எழுப்பபியடி ஒரு வாலிபர் வந்தார். பைக்கை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். வேறு சைலன்சர் பொருத்திய பிறகே ஓட்டிச்செல்ல அனுமதித்தனர்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கூறியதாவது: சென்னிமலை குமரன் சதுக்கத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல, வடக்கு ராஜவீதி மற்றும் கிழக்கு ராஜவீதி வழியாக செல்ல வேண்டும். குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்குராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக வாகனங்கள் பயணித்தால், 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் குமரன் சதுக்கம் பகுதியில் இருந்து மலை கோவிலுக்கு செல்பவர்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லாமல் வடக்கு ராஜவீதி, கிழக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை