உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மில்லில் நடந்த தீ விபத்து: 1,620 டன் பொருள் நாசம்

மில்லில் நடந்த தீ விபத்து: 1,620 டன் பொருள் நாசம்

கோபி: கோபி அருகே சின்னக்குளத்தில், வேஸ்ட் பேப்பரை அரைத்து காகித அட்டை உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, வேஸ்ட் பேப்பர்களை சேகரித்து வைத்திருக்கும் அறையில் தீப்பற்றியது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். பிறகு நம்பியூர், பெருந்துறை, சத்தி, பவானி தீயணைப்பு நிலையங்களில் இருநதும் வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இரவை தொடர்ந்தும் நீடித்த பணி, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நிறைவுக்கு வந்தது. அதாவது, 26 மணி நேரம் பணி நடந்துள்ளது. தீ விபத்தில் காகித அட்டை தயாரிக்க தேவையான மூலப்பொருள், 1,500 டன், உற்பத்தியான காகித பொருட்கள், 120 டன், டிராக்டர், ஜே.சி.பி., இயந்திரங்கள் எரிந்து நாசமானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மின் கசிவால் தீ விபத்து நடந்ததாக, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி