உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை மரக்கடையில் தீ விபத்து

சென்னிமலை மரக்கடையில் தீ விபத்து

சென்னிமலை, டிச. 12- சென்னிமலை, ஈங்கூர் ரோடு திருநகர் பகுதியில் மரம் அறுக்கும் மில் வைத்திருப்பவர் மகேந்திரன், 58. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இரவு, 9:45 மணியளவில் கடையின் முன் பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது. சென்னிமலை, பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, கடையின் முன் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அனைத்து மர சாமான்களிலும் பரவியது. லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.தீ விபத்து நடந்த கடை அருகே, நான்கு வீடுகள் கொண்ட அடுக்குமாடி வீடுகளிலும் தீ பரவியது. இதில், அவர்கள் அலறியடித்து ஓடினர். வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்ட மர சாமான் கடை அருகிலேயே, இருந்த பெட்ரோல் பங்க் உடனடியாக மூடப்பட்டது. தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை