மேலும் செய்திகள்
ஓட்டலில் தீ விபத்து
07-May-2025
நகை கடையில் தீ விபத்து
11-May-2025
Playoffல் காலுன்றியது பஞ்சாப்
18-May-2025
ஈரோடு, ஈரோட்டில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் தீக்கிரையானது.ஈரோடு, மாமரத்துபாளையத்தில், சாம் தாகா பெயரில் பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் மில் இயங்குகிறது. இங்கு, 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம், 2:00 மணியளவில் மில்லில் உள்ள 'டஸ்ட் ரீ-சைகிளர்' இயந்திரத்தில் தீப்பிடித்தது. சில வினாடிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலின்படி சென்ற ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், இயந்திரம் மற்றும் அதிலிருந்து பஞ்சு தீக்கிரையானது. மேலும் கழிவு பஞ்சிலும் தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சேத மதிப்பு, 10 லட்சம் ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
07-May-2025
11-May-2025
18-May-2025