உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரெக்சின் குடோனில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சாம்பல்

ரெக்சின் குடோனில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சாம்பல்

ஈரோடு, ஈரோட்டில், ரெக்சின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.ஈரோடு, வாசுகி வீதியில் வெங்கடேஸ்வரா ரெக்சின் குடோன் உள்ளது. இதன் உரிமையாளர் மாரிமுத்து, 56. நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு குடோனை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் குடோன் அருகே, லாரி அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மாரிமுத்துவுக்கு போன் செய்து, குடோனில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. ஈரோடு அரசுமருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ