பூட்டிய வீட்டில் தீ விபத்து
ஈரோடு: ஈரோட்டில் சத்தி ரோடு செங்குந்தர் நகர், மலர் அபார்ட்-மெண்ட்டில் மூன்றாவது தளத்தில் வசிப்பவர் ஜானகி. நேற்று மதியம் இவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. வீடு பூட்டப்பட்டிருந்தது. ஜானகி திருசெங்கோடு சென்றிருந்தார்.சக குடியிருப்புவாசிகள் தகவலின்படி ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். வீட்டில் சுவாமிக்கு ஏற்றிய விளக்கில் இருந்து தீ பரவி மரப்பொருட்களில் பற்றி தீப்பிடித்துள்ளது. இதில் மர பொருட்கள், பூஜை பொருட்கள், சுவாமி படங்கள் எரிந்ததாக, தீயணைப்பு நிலைய வீரர்கள் தெரிவித்தனர்.