உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூரை வீட்டில் தீ விபத்து

கூரை வீட்டில் தீ விபத்து

கூரை வீட்டில் தீ விபத்துபவானி, டிச. 22-அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி கோணமூக்கனுாரை சேர்ந்தவர் வடிவேல், 50; இவரது குடிசை வீட்டில் நேற்று காலை திடீரென புகை வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பரவியதால், அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டிலிருந்த ஐந்து பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், டிவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக தெரிகிறது. அம்மாபேட்டை போலீசார் விசாரணையில், மின் கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ