உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோலார் பேட்டரியில் மின் கசிவால் தீ; ஆடு-கோழி பலி

சோலார் பேட்டரியில் மின் கசிவால் தீ; ஆடு-கோழி பலி

பவானி, அத்தாணி அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 60; குடிசை வீட்டில் வசிக்கிறார். மூன்று ஆடுகள், இரண்டு பசு மாடு, கோழி வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் இரண்டு ஆடு, இரண்டு கோழி தீயில் சிக்கி பலியாகி விட்டன. இரண்டு பசு மாடுகளும் லேசான தீக்காயம் அடைந்தது. சோலார் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !