கொங்கு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
பெருந்துறை, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். முதல்வர் ராகவேந்திரன் வரவேற்றார். கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா மிஷன் நாராயணந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களின் கல்வி, ஆன்மிகம் மற்றும் வருங்காலத்தில் வாழ்க்கை முறை எவ்வாறு நடத்த வேண்டும் என பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் கிருஷ்ணன், உறுப்பினர் பழனிச்சாமி, கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் இளங்கோ, கொங்கு நேசனல் பள்ளி தாளாளர் தேவராஜா பேசினர். கடந்த, 2025 ஏப்., வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, 13 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதலாமாண்டில் சேர்ந்த மாணவர்களை, வாரியத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை, கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் வாழ்த்தினர். கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.