உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுப்பள்ளம் அணை மீன்கள் 22ம் தேதிக்கு பிறகு கிடைக்காது!

வரட்டுப்பள்ளம் அணை மீன்கள் 22ம் தேதிக்கு பிறகு கிடைக்காது!

அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. அணையில் மீன் பிடிக்க, அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுக்கு, 21 லட்சம் குத்தகை செலுத்தி, மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான குத்தகை உரிமம் வரும், 22ம் தேதியோடு முடிகிறது. இது ஒருபுறமிருக்க தந்தை பெரியார் வன உயிரின சரணாலயமாக அந்தியூர் வனச்சரகம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வரட்டுப்பள்ளம் அணையும் இடம் பெற்றதால், ஆறு மாதங்களுக்கு முன்பே, மீன் பிடிக்க மாவட்ட வனத்துறை அனுமதி மறுத்தது. ஆனால், மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, குத்தகை காலம் வரை மீன் பிடிக்க அனுமதி பெற்றனர். வரும், 22ம் தேதியோடு உரிமம் முடிவதால், அதன்பிறகு மீன் பிடிக்க மாவட்ட வனத்துறை அனுமதி தராது. இதனால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு, மாவட்ட நிர்வாகம் ஏதாவது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !