உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா கடத்திய ஐந்து பேருக்கு சிறை

குட்கா கடத்திய ஐந்து பேருக்கு சிறை

பவானி: சித்தோடு அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், சத்தி ரோடு மேம்பாலம் அருகே, சித்தோடு போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த கார் டிரைவரிடம் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசவே, காரில் சோதனை செய்தனர்.இதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 165 கிலோ புகையிலை பொருள் சிக்கியது. கார் டிரைவர் கர்நாடக மாநிலம் ஜகுனஹள்ளி அனில்குமார், 28, என தெரிந்தது. பெங்களூரூவில் இருந்து கோவைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.அனில்குமார் அளித்த தகவலின்படி கோவைக்கு விரைந்த சித்தோடு போலீசார், குட்கா பொருட்களை வாங்கி செல்வதற்கு வந்த, கோவை, குனியமுத்துார் ரமேஷ், 49; முகமது ரபீக், 39; அசாருதீன், 30; சிக்கந்தர், 39; ஆகியோரை கைது செய்தனர். காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஐந்து பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி