உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரியில் 2வது நாளாக தடை

பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரியில் 2வது நாளாக தடை

கோபி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி பகுதியில், நேற்று முன்தினம், 43 மி.மீ., மழை கொட்டியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொடிவேரி தடுப்பணை வழியாக, 5,219 கன அடி மழைநீர் வெளியேறிதால், தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை, 88.40 மி.மீ., மழை பெய்தது. இதனால் தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில், காலை, 7:00 மணிக்கு, 3,948 கன அடி, 9:00 மணிக்கு, ௧௦ ஆயிரத்து 414 கன அடியாக உயர்ந்தது. இதனால் இரண்டாவது நாளாக நேற்றும் தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்ந்தது. அதேசமயம் தடுப்பணை வளாகத்தில், தடப்பள்ளி வாய்க்காலின் தலைமதகு பகுதியில், இரு மரங்கள் வேருடன் வாய்க்காலுக்குள் சாய்ந்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ