உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி ஆற்றில் வெள்ளம்; கொடிவேரியில் குளிக்க தடை

பவானி ஆற்றில் வெள்ளம்; கொடிவேரியில் குளிக்க தடை

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், கொடிவேரி தடுப்பணையில், நுழைய, குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த, 3ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால், பவானி ஆற்றில், 866 கன அடி வந்ததால், ௪ம் தேதி தடை விதிக்கப்பட்டது. மறுநாள், 365 கன அடியாக நீர்வரத்து சரிந்ததால், பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நம்பியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 44 மி.மீ., மழை பெய்ததால், அரசூர் பாலம் வழியாக வெளியேறிய மழைநீரால் பவானி ஆற்றில் நேற்று காலை, 1,210 கனஅடி மழைநீர் வரத்தாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க, மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை