உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பறக்கும் படையினர் ரூ.2.90 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினர் ரூ.2.90 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முன்தினம் இரவு, கருங்கல்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பிரபாகரன் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர்.ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் என்பவரிடம், 52,000 ரூபாயை ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரி சண்முகம் தலைமையிலானவர்கள் நேற்று காலை நடத்-திய வாகன தணிக்கையில், புதுக்கோட்டை, அறந்தாங்கியை சேர்ந்த ஆசிக் முகம்மது காரில் கொண்டு வந்த, 2.90 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ