உணவு பாதுகாப்பு அதிகாரிகள்சென்னிமலை கடைகளில் ஆய்வு
சென்னிமலை:சென்னிமலை, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் போலீசார் இணைந்து மளிகை, பேக்கரி கடைகள், டீ ஸ்டால் மற்றும் உணவகங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நேற்று ஆய்வு செய்தனர்.மொத்தம், 11 கடைகளில் ஆய்வு செய்ததில் கேரி பேக் பயன்படுத்திய நான்கு கடைகளில் இருந்து, எட்டு கிலோ பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கவர் பறிமுதல் செய்யப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடைக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் ஒரு கடையில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக மூடப்பட்டது. மேலும் கடைக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு சம்பந்தமான புகார்களை, 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.