உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் மலையில் வன தீபாவளி

பர்கூர் மலையில் வன தீபாவளி

அந்தியூர்:பர்கூர்மலையில் உள்ள சோளகனை மலை கிராமரத்தில் அரசு உறைவிட நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாவோயிஸ்ட் போலீசார் சார்பில், வன தீபாவளி நேற்று கொண்டாடப்பட்டது. போலீஸ்-மக்கள் நல்லுறவை மேம்படுத்த கொண்டாடப்பட்ட வன தீபாவளியில், உறைவிட நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இங்கு பயிலும், 85 குழந்தைகளுக்கு இனிப்பு, காரம் மற்றும் டீ-சர்ட், ஸ்கூல் பேக், நோட்புக், பென்சில், பேனா வழங்கப்பட்டது. திருக்குறள் மற்றும் பேச்சுப்போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். பள்ளிக்கு கிரைண்டர், பழங்குடியின கிராமத்துக்கு, 5 சோலார் லைட்டுகள் போலீசார் சார்பில் வழங்கப்பட்டன. நிகழ்வில் வெள்ளித்திருப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் நலத்திட்ட உதவி வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், போலீசார், மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை