உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் ரூ.1.10 கோடியில் நுாலகம் முன்னாள் அரசு செயலர் திறந்து வைத்தார்

கொடுமுடியில் ரூ.1.10 கோடியில் நுாலகம் முன்னாள் அரசு செயலர் திறந்து வைத்தார்

கொடுமுடியில் ரூ.1.10 கோடியில் நுாலகம் முன்னாள் அரசு செயலர் திறந்து வைத்தார் கொடுமுடி, நவ. 29-கொடுமுடியில், 1.10 கோடி ரூபாய் மதிப்பில் கற்றல் மையத்துடன் கட்டப்பட்ட நுாலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுங்கரா தலைமை வகித்தார். முன்னாள் அரசு செயலர் கிருஷ்ணன் நுாலகத்தை திறந்து வைத்து நுால்களை ஒப்படைத்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், கொடுமுடியில் ஈரோடு-கரூர் மெயின் ரோடு வடக்கு தெருவில் தனக்கு சொந்தமான, 3.75 சென்ட் இடத்தை பேரூராட்சிக்கு தானமாக வழங்கினார். அந்த இடத்தில் கற்றல் மையத்துடன் நுாலகம் கட்ட விரும்பினார். இதை தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தில், 1.10 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் பங்குத்தொகையான, 55 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. மீதி நிதி அரசு சார்பில் வழங்கப்பட்டு, 1,640 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மேல் தளம் என இரு தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. வெளிப்புற வாயில், திண்ணை, முற்றம், மாணவர்கள் குழுவாக படிக்கும் பகுதி, தனியாக படிக்கும் பகுதி மற்றும் கம்ப்யூட்டர் செயல்பாட்டு கூடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் நீட், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நுாலகம் விளங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை