உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைத்தறி தயாரிப்புகளை பயன்படுத்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை

கைத்தறி தயாரிப்புகளை பயன்படுத்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை

புளியம்பட்டி, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, புன்செய் புளியம்பட்டியில் தனியார் பள்ளி மாணவ, மாணவியரை கைத்தறி கூடத்துக்கு அழைத்துச் சென்று, பாரம்பரிய கைத்தறி வகைகள் தயாரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.கைத்தறி கூடத்தில் நெசவுக்கு பயன்படுத்தும் பட்டு நுால், ஜரிகை மற்றும் நெசவாளர்கள் தயாரித்த பாரம்பரிய கைத்தறி சேலைகளை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில பங்கேற்ற, ஓய்வு பெற்ற இஸ்ரோ சந்திராயன்-2 உதவி திட்ட இயக்குனர் கல்பனா நிருபர்களிடம் கூறியதாவது:சுதந்திர போராட்டம் தீவிரமடைந்த நிலையில், 1907 ஆக., 7ம் தேதி வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, சுதேசி இயக்கம் துவங்கப்பட்டது. நமது நாட்டிலேயே தயாரிக்கப்படும், கைத்தறி துணி வகைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நாளாகும். இதையடுத்து 2015 ஆக.,7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி பாரம்பரிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில், பாரம்பரியத்தை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, கைத்தறி கூடத்துக்கு மாணவர்களை அழைத்து சென்று கைத்தறி துணி தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய கைத்தறி தயாரிப்புகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை