நந்தா மருத்துவ கல்லுாரி சார்பில் இலவச மருத்துவ ஊர்தி சேவை
நந்தா மருத்துவ கல்லுாரி சார்பில்இலவச மருத்துவ ஊர்தி சேவைஈரோடு, அக். ௧௮-ஈரோடு விஸ்தார் பைனான்ஸ் நிதியுதவியுடன், தமிழ்நாடு சேவாபாரதி அறக்கட்டளை, நந்தா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து, கிராமப்புற மக்களுக்கு துரித மருத்துவ சேவை வழங்கும் வகையில், இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி துவக்க விழா நடந்தது. வாகனத்தை நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்க மாநில தலைவர் மருத்துவர் குமாரசாமி, ஈரோடு கோட்ட துணைத்தலைவர் குமார், மாநில செயலாளர் ஜெகதீசன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு சேவாபாரதி அறக்கட்டளை மாநில துணைத் தலைவர் விவேகானந்தன், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.