உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை

அந்தியூர்: அந்தியூர் அருகே அண்ணாமடுவு துணை மின் நிலையத்தில், இலவச மின் இணைப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம், எட்டு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கினார். * கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 2.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அத்தாணி வாரச்சந்தை வளாகத்தை, சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் திறந்து வைத்தார். இந்நிலையில் சந்தை வளாகத்தை எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் நேற்று பார்வையிட்டார். அப்போது வியாபாரிகள், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ