உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசுப்பள்ளியில் பழப்பண்ணை

அரசுப்பள்ளியில் பழப்பண்ணை

பெருந்துறை: உலக ஓசோன் தினத்தை ஒட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பழப்பண்ணை அமைக்கும் பணி நேற்று நடந்தது. கொய்யா, மா, சப்போட்டா, சீதாப்பழம், எலுமிச்சை, நாவல், பெருநெல்லி, மாதுளை, ஆரஞ்சு, அத்தி, கொலுமிச்சை போன்ற பல்வேறு பழ மரக்கன்றுகளை, பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் தலைமையில் நடப்பட்டது. நிகழ்வில் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாட்டை வேளாண் ஆசிரியர் கந்தன், ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி