துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
காங்கேயம், டிச. 8-வெள்ளகோவில் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முன்னதாக உடல் பரிசோதனை விவர பதிவேடு வழங்கப்பட்டு, காசநோய் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சளி மாதிரி எடுக்கப்பட்டது. சுகாதார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில், 93 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து வழங்கப்பட்டது. மருத்துவர் தினேஷ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.