உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காப்பகத்தில் காந்தி ஜெயந்தி விழா

காப்பகத்தில் காந்தி ஜெயந்தி விழா

ஈரோடு:யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா, கொங்கு கிளை சார்பில், காந்தி ஜெயந்தி, லால் பகதுார் சாஸ்திரி பிறந்த தினம், சர்வதேச புன்னகை தினம், சர்வதேச காபி தினம், சர்வதேச சைவ தினம், காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று, ஈரோடு அடுத்த நஞ்சப்ப கவுண்டன்வலசு இளைய பாரத குழந்தைகள் அன்பு இல்லத்தில் கிளை சேர்மன் மகேந்திரன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.காப்பக செயலர் கலைசெல்வி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சந்திரசேகர், செயலர் ராஜா, ஐயப்பன், ராஜ சூரியா ஆகியோர் பேசினர். கலைக்குழு உறுப்பினர் ஜெயபிரியா சுகுமார், குழந்தைகளுக்கு தேவையான பள்ளி சாதனங்கள், சத்து பொருட்களை வழங்கினார். பின், காந்தியடிகள், காமராஜர் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். காப்பக பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை