உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளகோவிலில் காந்தி ஜெயந்தி விழா

வெள்ளகோவிலில் காந்தி ஜெயந்தி விழா

காங்கேயம், மகாத்மா காந்தியின், 156வது பிறந்தநாளையொட்டி, வெள்ளகோவில் அமராவதி நகரில், அவரது உருவச்சிலைக்கு மக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் நேற்று மரியாதை செலுத்தினர், உறுதிமொழி எடுத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வெள்ளகோவில் தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் உள்பட பல்வேறு அமைப்பினர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.*தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலைக்கு, திருப்பூர் மாவட்ட காங்., தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் லால்பகதுார் சாஸ்திரி மற்றும் காமராஜர் படங்களுக்கும் மரியாதை செய்தனர். த.மா.கா., சார்பில் மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில், மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !