மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
1 hour(s) ago
ஈரோடு, காந்தி ஜெயந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி பிறந்த நாள், முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளை ஈரோட்டில் காங்., கட்சியினர் நேற்று கொண்டாடினர்.இதன்படி அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலை, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை, மூலப்பட்டறையில் காங்., கட்சி அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, காந்தி, காமராஜர் படங்களுக்கு மரியாதை செலுத்தினர். இதில் மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமையில், மகிளா காங்., தலைவி ஞானதீபம், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், நிர்வாகிகள் பாஷா, அர்ஷத், விஜய்கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.* கோபி காந்திய அறக்கட்டளை மற்றும் நம்பியூர் சர்வோதயா சங்கத்தின் சார்பில், கோபி நகராட்சி அலுவலகம் முன் காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடினர். ஓய்வு டி.எஸ்.பி., தங்கராசு தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் வக்கீல் ரத்தினசபாபதி, செயலாளர் ஜெகதீஸ்வரன், நகராட்சி சேர்மன் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், கட்சி அலுவலகத்தில் காந்தி உருவப்படத்துக்கு, தலைவர் சுந்தரராசு தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
1 hour(s) ago