உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இருவரை தாக்கி மொபைல் பறிப்பு ஈரோட்டில் 4 பேர் கும்பல் கைது

இருவரை தாக்கி மொபைல் பறிப்பு ஈரோட்டில் 4 பேர் கும்பல் கைது

ஈரோடு :திருச்சியை சேர்ந்தவர் காந்தி, 55; வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லுாரி எதிரே ஆயில் மில் சாலையில், இரு நாட்களுக்கு முன் நடந்து சென்றார். அப்போது வந்த நான்கு பேர் அவரை தாக்கி, மொபைல் போனை பறித்து சென்றனர். முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால், சுய நினைவிழந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் நிலை மோசமடைந்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். அத்துடன் அதே பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளி ஒருவரையும் கும்பல் தாக்கி பணத்தை பறித்தனர். இது தொடர்பாக விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த அரவிந்த், 29, சந்தோஷ், 20, நந்தேஷ்வரன், 23 மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் சில வழக்குகள் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை