தீப்பிடித்து எரிந்த குப்பை
காங்கேயம், காங்கேயம் நகராட்சி வார்டுகளில் சேகராமாகும் குப்பை, சென்னிமலை ரோட்டில் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்படுகிறது. காங்கேயம்-சென்னிமலை சாலையில் இருந்து பழையகோட்டை சாலை செல்லும் வழியில் இருபுறமும் குப்பை கொட்டப்படுகிறது. இதற்கு அவ்வப்போது மர்ம ஆசாமிகள் தீ வைப்பது வழக்கமாக உள்ளது. தீ வைத்தால் பல மணி நேரம் தொடர்ந்து எரிகிறது. இந்த வகையில் நேற்றும் வெகுநேரம் எரிந்தது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.