மேலும் செய்திகள்
விபத்தில் தொழிலாளி பலி
08-Jun-2026
பவானி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பூபதிராஜா, 54; சித்தோட்டில் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்தார். திருமணம் ஆகாதவர். வேலைக்கு வந்தவர், உடல்நிலை சரியில்லை என கூறிவிட்டு, மதியம் வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. இந்நிலையில் சித்தோட்டில் ஒரு தனியார் மது பார் முன் மயங்கி கிடந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பூபதிராஜாவின் அண்ணன் ராஜ்குமார் புகாரின்படி, சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Jun-2026