உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்ணெண்ணெய் நிலையத்தின் ராட்சத இரும்பு டேங்க் விற்பனை

மண்ணெண்ணெய் நிலையத்தின் ராட்சத இரும்பு டேங்க் விற்பனை

கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், 2000ல், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் துவங்கப்பட்டது. அப்போது சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 12 ரேசன் கடைகளை சேர்ந்த, 13 ஆயிரம் கார்டுதாரர், நிலையத்-துக்கு வந்து, மண்ணெண்ணெய் பெற்று சென்றனர். அதேசமயம் இருப்பு வைப்பதற்காக, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ராட்சத இரும்பு டேங்க் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைந்-ததால், அந்தந்த பகுதி ரேசன் கடைகள் மூலமே, மண்-ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம், 2022ல் மூடப்பட்டது. இந்நிலையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த, ராட்சத இரும்பு டேங்க் தோண்டி எடுக்கப்பட்டது. மூன்று டன் எடையுள்ள தொட்டி, 42 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக, அதிகா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை