ரேஷன் கடைக்கு போனாலே பி.பி., எகிறுது ஊழியருக்கு மட்டுமல்ல; மக்களுக்கும்தான்!
ஈரோடு: தமிழ்நாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணி-யாளர் சங்கம் சார்பில், ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இணை செயலர் முத்துகி-ருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் மேசப்பன் முன்னிலை வகித்தார். ரேஷன் கடைகளில் 'புளூ டூத்' இணைக்கப்பட்ட மின்னணு தராசு மூலம் பொருட்கள் வினியோகம் செய்வதால் தாமதம் ஏற்ப-டுகிறது. இதனால் ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் வீண் பதற்றத்துக்கு ஆளாகின்றனர். இம்முறையை நீக்கி எளிமைப்படுத்த வேண்டும். பகுதி நேர ரேஷன் கடைகளில் பழைய பி.ஓ.எஸ்., கருவிகளில் கை விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு ஆகியவை இரு முறைகளில் உறுதி செய்து, பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடை-யாளர் ஒருவரை அனுமதிக்க வலியுறுத்தினர்.