உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நல்லாசிரியர் விருது; விண்ணப்பிக்க அழைப்பு

நல்லாசிரியர் விருது; விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியருக்கு மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறது. நடப்பு 2025 - 2026 ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற தகுதியான அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் nationalawardsstoteachers.education.gov.inஎன்ற இணைய தளத்தில் ஜூலை 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள், கல்வி அலுவலகங்களில் நிர்வாகப் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்ட தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து மாநிலத் தேர்வுக்குழுவுக்கு ஜூலை 16க்குள் அனுப்பி வைக்க வேண்டும் இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் தரப்பில் இருந்து முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை